அபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..?
–முன்ஸிப் அஹமட்–
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் காலம் கடந்த ஏப்ரல் 02ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அவர் ஓய்வுபெற்று வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையில் தனது சேவைக்காலத்தை நீடிக்குமாறு கோரி, சுலோச்சனா ஜெயபாலன் மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆயினும் அதற்கான அனுமதி அவருக்கு கிடைக்காத நிலையில் தொடர்ந்தும் அவர் அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். இதேவேளை, சண்முகா கல்லூரியில் அதிபர் சேவையிலுள்ள ஒருவர் கடமையில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, தான் சேவையில் இல்லாத நிலையிலேயே, மாகாண கல்வித் திணைக்களத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, சண்முகா கல்லூரியின் அதிபர் என சுலோச்சனா ஜெயபாலன் கையெழுத்திட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேவையிலும், அதிபர் பதிவியிலும் இல்லாத நிலையில்தான், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளை ஹபாயா அணிய வேண்டாம் என, சுலோச்சனா ஜெயபாலன் அச்சுறுத்தியுள்ளார்.
சண்முகா கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார், அங்கு அத்துமீறி நுழைந்து அதிபர் சுலோச்சனா ஜெயபாலனை அச்சுறுத்தியதாக, சில ஊடங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
ஆனால், சுலோச்சனா ஜெயபாலன்தான் சண்முகா கல்லூரியின் அதிபர் பதவியில் அத்துமீறி இருந்துள்ளதோடு, சட்டவிரோதமாகவும் அந்தப் பதவியை வகித்துள்ளார் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
புதிது
பச்ச கள்ளி
ReplyDeleteShe was a Good Principle (Got many award for this School). Please don't disrespect her hard work. Give respect for her honorable Carrier. She was one of good teacher. Mistakes happens.. for some reason we have to correct it without hurting her. it is our Religious teaching. We learn these good think also from teacher. Please give respect... And then fight for our right as Islam for Decent dress call 'Abaya' not Half naked/Sexi Sari... Sorry.
ReplyDeleteஇது உண்மையாக இறந்தால் எனக்கு ஒன்று நாபகம் வறுது இறால் தன் தலையில் சேற்றை வைத்துகொன்று தான் சுத்தம் தான் சுத்தம் என்று சொல்லுமாமே
ReplyDeleteThis women brought the principal position to the dog level in Sri Lanka shame on you and on your school. Get loss.
ReplyDeleteI am giving advise to the Educational Director who in charge of her area, must check the credibility of her O/L result.
ReplyDeleteAs a principal, you must carry on your good work like this and before retire you must teach all the teachers and principal regarding the islamic violent cultural system in all over SL.keep it up the good even after your retirement
ReplyDeleteபெண்ணாக இருந்தாலும், கடைசி காலத்தில் கூட, காடையர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தனது கடமையை சரியாக செய்த இவரை JM வாசகர்கள் எல்லாரும் பாராட்டுகின்றோம்.
ReplyDeleteI dont think its a big issue to continue as principal for some more time till correct environment is made in the school (department must have allowed her) but my confusion is about her perception that abaya will ruin the tradition of the school.Strange that even such a matured (?) woman think in that line.Madam, please sit alone in a lonely place and think twice and I am sure you will change your mind. Dont you see that abaya is a descent dress ?.
ReplyDeleteஅதெப்படி அன்டனி ,உங்கள் மக்கள் எந்த பிழை செய்தாலும் .அதற்க்கு ஏற்றால்போல் நியாயம் பேசுறிங்க .நீங்க ஒரு அனியாயமா ஆள் என்பாதர்க்கு நீங்களே ஒரு நியாயமான உதாரணம்
ReplyDeleteதிருகோணமலை சண்முகா அரச இந்துக் கல்லூரியில் ஆசிரியர்கள் அனைவரும் இந்துக்களின் கலாச்சார ஆடையை அணிவது தவிர்க்க முடியாத கடமை என்றால், இலங்கைத் தீவில் அது போன்ற பல நூறு முஸ்லிம் அரச பாடசாலைகள் உண்டு , அப்பாட சாலைகளில் கடமையாற்றும் இந்து ஆசிரியர்களிடம் முஸ்லிம் கலாச்சார ஆடையை (அபாயா) அணிந்து வரும்படி அறிவுறுத்தல் எவ்விதத்திலும் தவறில்லையல்லவா?
ReplyDeleteஆதரவளிப்போர் இதற்கும் அதரவு தருவதே நீதியும் கனவான் தன்மையுமாகும்.
இச்சட்டம் அமுலுக்கு வருமாயின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் நெஞ்சு, முதுகு, வயிறு, தொப்புள் காட்சிகளை ஒழித்த பெருமையும் அதிபர் சலோச்சனா ஜெயபாலனுக்கே உரித்தாகும், வாழ்த்துக்கள்.
(எந்த மனிதரிடத்திலும் குறிப்பாக பெண்களிடத்தில் தனது உடலின் பாகங்களை மூடச் சொல்லுவது அவரது சுதந்திரததில் தலையிடுவதாக அமைந்தாலும், அவருக்கு தர்மசங்கடத்தையோ அவமான கூச்ச உணர்வையோ ஏற்படுத்தப் போவதில்லை.
மாறாக வாழ்நாளில் மூடிக்கொண்டிருந்த தனது உடலின் ஒரு அங்கத்தை கலாச்சாரம் என்ற பெயரில் நிர்பந்தமாக திறக்க வைப்பது எவ்வளவு அநாகரிகம் என்பதை பண்பாடுள்ள சமூகங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்,)