Header Ads



புதிய வியூகங்களுடன் மைத்திரி - மகிந்த களத்தில் குதிப்பு, இன்று முக்கிய சந்திப்புக்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் சந்திப்பு நடத்தவுள்ளதாக நவ சிங்கள உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் போது அதனை எதிர்நோக்குவது மற்றும் அதற்கான தந்திரோபாயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக நவ சிங்கள உருமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சுமார் 30 கட்சிகள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியை பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிகளின் பரிந்துரைகளையும் யோசனைகளையும் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்பினையும் விடுக்கவில்லை.

2

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இன்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது, ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.