அக்கரைப்பற்றில் “ஒசுசல” பைசால் காசிமின் முயற்சி, ராஜித திறந்து வைக்கின்றார்
-மு.இ.உமர் அலி-
அக்கரைப்பற்று நகரில் “அரச ஓசுசல ‘ ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இம்மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்துமணியளவில் பொத்துவில்-கல்முனை பிரதான வீதியில் இந்த ஒசுசல விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பா.உ. அவர்களது முயற்சியின் பலனாக ஆரம்பமாகின்ற இருக்கின்ற இந்நிறுவனம் பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களது அழைப்பின் பேரில் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களால் கோலாகலமாக திறந்துவைக்கப்பட இருக்கின்றது.
இப்பிராந்திய மக்களுக்கு தரமான மருந்துகளை நியாயமான விலைக்கு பெற்றுக்கொள்வதற்கு வழிகோலியிருக்கும் ஒசுசல திறப்புவிழாவில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர்,தலைவர் உட்பட சுகாதார அமைச்சினை சேர்ந்த இன்னும் பல உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
பைசால் காசீம் பிரதி சுகாதார அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மட்டுமன்றி வடமாகாணம் உட்பட நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் சுகாதார துறையில் பல்வேறுபட்ட அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Great job, However we want you to fight for basic political rights of Muslims community
ReplyDelete