Header Ads



ஷிப்லி பாறூக்கின் முன்மாதிரி

நகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச் செய்து அதனை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி MRF. றிப்கா அவர்களுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தபால் மூலம் அனுப்பி வைத்தார். 

மேலும் தான் கலந்துகொண்ட முதலாவது நகர சபை அமர்விலேயே நகர சபை அமர்வுகளின்போது தனக்கு வழங்கப்படும் சிற்றுண்டிக்கான செலவினை தனது சொந்த நிதியில் இருந்து நகர சபைக்கு மீள வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது  தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 

“அரசியல் என்பதனை முழுக்க முழுக்க மக்களுக்கான சேவையாகக் கருதியே நான் செயற்பட்டு வருகின்றேன். அரசியலினூடாக எந்தவொரு வருமானங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ, விருப்பமோ எனக்கு கிடையாது. 

ஆகவேதான் இவ்வாறான மக்கள் பணிக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை நான் எனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு மாறாக மக்களுக்காக செலவு செய்கின்றேன்” எனவும் தெரிவித்தார். 

கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக்காலத்தின்போது மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மாகாண சபையினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மக்கள் சார்ந்த பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தியமை மாத்திரமன்றி மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றபோது தனக்கென வழங்கப்பட்ட உணவுக்குரிய மொத்த கொடுப்பனவுத் தொகை மற்றும் மாகாண சபையினால் தனது அலுவலகத்திற்கென வழங்கப்பட்ட பொருட்களில் மக்கள்பணி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமைபோக மீதமாகவிருந்த காகிதாதிகள், உள்ளிட்ட அனைத்து அலுவலக பொருட்களையும் மாகாண சபைக்கு மீள வழங்கியிருந்தார். 

மேலும் மாகாண சபை உறுப்பினர்களுக்களுக்கு அரசினால் வழங்கப்படும் வாகனங்களுக்கான விஷேட வரிவிலக்குக்குரிய பெறுமதியினை பயன்படுத்தி அவர் சுமார் 62 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி பாம் வீதியினை முற்றுமுழுதாக கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்து வழங்கியிருந்ததோடு மீதித் தொகையினை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  

அரச அதிகாரங்களை பெறுகின்றவர்கள் ஊழல் மோசடிகளைச் செய்து மக்கள் பணத்தினை சூறையாடுகின்றதொரு காலகட்டத்தில் நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் இவ்வாறான செயற்பாடு முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மிகச் சிறந்ததொரு படிப்பினையாகும்.

மேலும் பிற சமூகத்தவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமாக கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்கக்கூடிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடொன்றாகவும் இது அமைந்துள்ளது.

2 comments:

  1. நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 16:128)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.