Header Ads



சந்திரிக்காவின் பரிந்துரையை, நிராகரித்த மைத்திரி…

தன்­னைக் கொலை செய்ய முயன்ற குற்­றத்­துக்­காக நீண்­ட­கா­லம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு வெசாக்கை முன்­னிட்டு மன்­னிப்பு வழங்குமாறு, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க விடுத்த வேண்­டு­கோள், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதியாக  சந்­தி­ரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா பதவி வகித்­த ­போது, அவர் மீது தாக்­கு­தல் நடத்தத் திட்­ட­ மிட்ட, உத­விய குற்­றத்­துக்­காக தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் டுள்­ளது. சந்­தேக நபர்­க­ளாக மிக நீண்ட கால­மாக சிறை­வா­சம் அனு­ப­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ளிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில், வெசாக்கை முன்­னிட்டு அவர்­களை மன்­னிப்­பில் விடு­விக்­கு­மாறு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா  கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இது­வ­ரை­யில் அவ­ரது கோரிக்­கைக்கு அமை­வாக அர­சி­யல் கைதி­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன, முன்­னாள் ஜனாதிபதியின்  கோரிக்­கையை ஏற்­றுக் கொள்­ளா­மை­யி­னா­லேயே அவர்­களை விடு­விக்­க­வில்லை எனக்  கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­யான ஆனந்­த­சு­தா­க­ரது பிள்­ளை­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நேரில் சந்­தித்­தி­ருந்­தார். ஆனந்­த­சு­தா­கரை பொது மன்­னிப்­பில் சித்­தி­ரைப் புத்­தாண்­டுக்கு விடு­விப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால், இன்று வரை­யில் ஆனந்த சுதா­கர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என்­பது  குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மனிதர்களை தேடி ச் சந்திக்கும் நல்ல குணமுள்ள மிஸ்டர் மைத்திரிக்கு சில கெட்ட விடாப்பிடிகளுமுண்டு.
    பாதிக்கபட்டவரே மண்ணிப்பளித்து விடுவிக்க விரும்புகையில் மனித நேயமின்றி தன் அகங்கார பதவியைக்கொண்டு தடுத்து நிறுத்தும் கெட்ட குணமுமுண்டு.
    தயவுசெய்து அவர்களை விடுவியுங்கள். ஆயிரக்கணக்கான போராளிகளை புணர்வாழ்வளித்து விடுவித்த உங்களுக்கு இவர்களையும் விடுவிப்பதில் சட்டங்களோ பிரச்சினைகளோ குருக்கே நிற்காதென்று நம்புகிறோம்.
    அடுத்த முறைகளுக்கு ஆட்சிக்கு வராத நீங்கள் இதனையும் ஒரு நல்ல காரியமாக எடுத்து அவர்களை விடுவியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.