யானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம்பிக்க 3 பேர் நியமனம்
அரசியல் செல்வாக்குடன் போலித் தகவல்களை சமர்ப்பித்து சமுர்த்தி உதவி பெறுபவர்களைக் கண்டறிவதற்காகவும், உதவித் திட்டங்களை உரிய வகையில் பகிர்வதற்காகவும் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமிருந்த சமுர்த்தி விவகார அமைச்சு நேற்றுமுன்தினம் தமது கட்சி வசமாகியதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டார, பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய குழுவில், அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
சமுர்த்தி உதவிகளைப் பெறுவதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. வருமானம், வாழ்க்கைத்தரம் உட்பட மேலும் சில விடயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.
எனினும், போலித் தகவல்களை சமர்ப்பித்து ஆயிரக்கணக்கானவர்கள் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும், வறுமையால் வாடுபவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேவேளை, பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர், அரசியலுக்காக சமுர்த்தித் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், சமுர்த்தி பெற்றுத் தருவதாக சிலர் பணம் வசூலிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை தொடர்பில் ஆராய்ந்து உரிய வகையில் பங்கீட்டை வழங்குவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது என்றுள்ளது.
முன்னைய அமைச்சர் இனி ஜம்பர் அடிச்சு சிறையில் மாய்வதற்கு ஆயத்தமாக இருந்தால் போதும்.
ReplyDelete