எனக்கும் 1 லட்சம் ரூபாய் பணம் தந்தார்கள் - பொன்சேகா
கடந்த பொதுத் தேர்தலின் போது அர்ஜூன் அலோசியஸ் தனக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தான் அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தாது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளருக்கு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.
அதேவேளை தனது அமைச்சில் நிதி தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகிய செய்திக்கு பதிலளித்துள்ள பொன்சேகா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மூலம் தமது அமைச்சு நிதி கிடைத்துள்ளதாகவும் நிதி தட்டுப்பாடு எதுவும் கிடையாது எனவும் மனித வலு தொடர்பான பற்றாக்குறை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழிஞ்சது போ, ஒரு Dயும் உத்தமன் இல்ல
ReplyDelete