Header Ads



ரணிலைக் காப்பாற்றுமா TNA..? கொழும்பில் மந்திராலோசனை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

”நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

நாளையும், நாளை மறுநாளும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

நாங்கள் நிலைமைகளை குறித்தும்,  பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் கலந்துரையாடுவோம்.

அதன் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா – இல்லை அதனை எதிர்ப்பதா என்று முடிவு செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
    (அல்குர்ஆன் : 57:22)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Better to keep Ranil at this stage

    ReplyDelete

Powered by Blogger.