Header Ads



பரபரப்பான சூழலில் இன்று SLFP மத்திய குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய  குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது.  மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று ஐதேக போர்க் கொடி உயர்த்தியுள்ளது.

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சுதந்திரக்கட்சி அமைச்சர்கள், தாம் பதவியில் இருந்து விலக அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

இந்த நிலையில், இன்றிரவு நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.