Header Ads



ஜோன், நிமால், டிலான், அனுர வெளியேறினால் SLFP என்ற பெயர் பலகை மாத்திரமே எஞ்சும் - சுசில் பிரேமஜயந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது அதன் பொதுச் செயலாளர் அல்ல எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடுகள் அல்ல எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

7 முதல் 8 பேர் கொண்ட குழுவே அப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -04- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் செனவிரத்ன, நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, அனுரபிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறினால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெயர் பலகை மாத்திரமே எஞ்சும்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனி அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த தனது உரையின் போது மத்திய வங்கியில் நடந்த பிணை முறி பத்திர விவகாரம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர், அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க பரிந்துரைத்தமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுசில் பிரேமஜயந்தவின் உரைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

1 comment:

  1. Hahahaha...jockers....! and Jumping to Jump
    Mr. MR knows you all of ur attitute....
    So, never like what u think
    MR is gentleman....but behind of him are all cheaters

    ReplyDelete

Powered by Blogger.