O/L பரீட்சையில், நிஸ்வான் மொடல் ஸ்கூல் சாதனை
அக்குறணை யகீன் மொடல் ஸ்கூலின் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் கடந்த க . பொ. த சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
முதன் முதலாக இப்பாடசாலையிலிருந்து மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவியர்களும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று க . பொ. த உயர் தரத்திற்குச் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வடைவு சம்பந்தமாக கல்லூரிக் குழுமத்தின் தலைவர் பஹ்மி பாரூக் கருத்துத் தெரிவிக்கையில் " இம்மாணவிகள் 100% உயர் தர வகுப்புகளுக்கு சித்தியடைந்திருப்பது உண்மையிலேயே மிகவும் பாராட்டப் பட வேண்டிய விடயமாகும். இதன் பின்னால் வெவ்வேறு பரீட்சைகளுக்கு இந்தப் பாடசாலையிலிருந்து தோற்றவிருக்கும் மாணாக்கருக்கு இது மிகப்பெரிய ஒரு முன்மாதிரியாக விளங்கும்.
மேலும் இப்பாடசாலையில் பரீட்சார்த்த ரீதியாக நவீன ஈ- லேனிங் முறை மூலமாக ஆசிரியர்கள் இன்றி கற்பிக்கப்பட்ட முயற்சியாண்மைக் கல்வி (Entrepreneurial Studies) என்ற பாடத்தில் 65% இற்கு மேற்றப்பட்ட மாணவியர் A சித்தி பெற்றிருப்பது விசேடமான ஒரு அம்சமாகும். இது விரைவில் இப்பாடசாலையில் எதிர்பார்க்கப்படும் SMART CLASSROOM கற்றல் கற்பித்தல் முறைக்கான மிகச் சிறந்த ஊக்குவிப்பாகும்" எனத் தெரிவித்தார்.
இப்பாடசாலையின் பெறறுபேறுகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.
Ilma Wazeer (Akuarna) 9A
Shahla Mahroof (Akuarna) 8A, 1B
Aadhila Thalib (England) 7A ,2B
Maryam Shafee (Ambatanne) 7A, 2C
Shifa Saljook (Madawala Bazaar) 6A,3B
Fathima Fahmy (Ambatanne) 6A, 2B, 1C
Zoona Simsiyan (Akuarna) 5A, 3C, 1S
Shaila Nazeer (Akuarna) 4A, 2B, 3C
Asrifa Iqbal (Madawala Bazaar) 2A,4B,3C
நிஸ்வான் மொடல் ஸ்கூலில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற இல்மா வஸீர் கூறும் போது தனது பாடசாலையின் வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் தனது அடைவில் பேருதவியாக அமைந்தன என்று குறிப்பிட்டார். அத்துடன் 7A, 2B சித்தியைப் பெற்ற ஆதிலா தாலிப் " நான் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறேன். நிஸ்வான் பாடசாலையில் நான் மாணவியாக இருந்த போது எனக்கு கிடைத்த ஒழுக்கமான சூழலும் வழிகாட்டலும் இந்த நாட்டில் எனது வாழ்வை ஒழுங்காக அமைத்துக்கொள்வதற்கு மிகப் பெறுமதியான ஒரு அஸ்திவாரமாக அமைந்துள்ளன. அத்துடன் எனது கல்வியிலும் மிகச் சிறந்த ஒரு பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டேன் " என்று கூறினார்.
இப்பாடசாலையின் முதலாவது க . பொ. த உயர்தர வகுப்புக்கள் COMMERCE பிரிவில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Post a Comment