புற்றுநோய் வைத்தியசாலைக்கு MRI இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க உதவுங்கள் - மொஹமட்
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுத்து போன்று, மிகவிரைவில் MRI Scanner இயந்திரத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக புற்றுநோய் எதிர்ப்பு அணியின் தலைவரும், ஹதீஜா பௌண்டேசன் தலைவருமான எம்.எஸ்.எச். மொஹமட் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையை தெற்காசியாவில் மிகச்சிறந்த வைத்தியசாலையாக மாற்றுவதே எமது திட்டமாகும்.
அந்தவகையில் எமது அடுத்த இலக்கு, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு MRI Scanner இயந்திரம் பெற்றுக்கொடுப்பதாகும். இந்த இயந்திரத்தின் விலை 25 கோடி ரூபாய்களாகும்.
தனியார் வைத்தியசாலையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள 40.000 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது.
இதனை கஷ்டப்பட்ட மக்களினால் மேற்கொள்ள முடியாது. எனவேதான் நாம் குறித்த இயந்திரத்தையும் பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
இன ஒற்றுமைக்காக எமது நாடு ஏங்கிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களும் நீடிக்கிறது. இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் தமது உயர் பங்களிப்புகளை இத்திட்டத்திற்கு வழங்குவதன் மூலம் ஈருலகிலும் நன்மைகளை பெறமுடியுமாக இருக்கும்.
எனவே நாம் மிகவிரைவில் ஆரம்பிக்கவுள்ள, இத்திட்டத்திற்கு தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்ய முன்வருமாறு இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
பிற்குறிப்பு - மேலேயுள்ள படத்தில் மெஹமட் ஹாஜியாருடன் காணப்படும் இஸ்லாமிய சகோதரி, 2014 ஆண்டு சிரச தொலைக்காட்சி நடத்திய 'லட்சாதிபதி' போட்டியில் பங்கேற்று 125000 ரூபாய்களை வென்று, அந்த பரிசுத் தொகையை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்த இஸ்லாமிய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இது வாங்கி கொடுப்பதை ஒரு சதகாவாக கருதமுடியுமே தவிர இதை வாங்கி கொடுப்பதால் மத நல்லிணக்கம் வரும் என்பது பகற்கனவு!
ReplyDeleteமுஸ்லீம்கள் குர்ஆன் சுன்னத்தினை வாழ்வில் கொண்டு வராதவரை மாற்று மதத்தவர் மனதில் இடம்பிடித்தல் இயலாத காரியம்!
ஏனெனில். .
உள்ளங்களை அறிந்தவனும் உள்ளங்களை புரட்டுபவனும் அழ்ழாஹ் ஒருவனே