Header Ads



தேர்தலில் வெற்றிபெற மகிந்தவுடன், இணைய வேண்டும் - ராஜாங்க அமைச்சர்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை நீக்க முடியாது போனால், அன்றைய தினத்தில் தேசிய இணக்க கூட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என்று தான் கூறியதில் எவ்வித மாற்றமும் இல்லை என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, இதில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கண்டிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இடையிலான கூட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இன்றிரவு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சம்பந்தமாக காணப்படும் அரசியல் சூழலில் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது கட்சியில் பெரும்பான்மையானோர் கருதுகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில்,மகிந்த ராஜபக்ச தரப்புடன் இணைய வேண்டும் என்ற கடும் நிலைப்பாடு கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இனவாதிகள்  ஒரு  புறமும்
    நீதியாளர்கள்  மறு  புறமும்
    பிரிந்துவிட்டாலே   போதும்
    இலங்கை அன்றே உருப்படும்

    ReplyDelete

Powered by Blogger.