பிரதமரை தோற்கடிக்க, பணம் தாருங்கள் - எம்.பி.க்கள் பேரம் பேச்சு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை தோற்கடிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தொடர்புகளை கொண்டு பெரிய வர்த்தகர்களிடம் பணத்தை கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
கெசினோ, நிர்மாணத்துறை, ஊடகத்துறை சார்ந்த மிகப் பெரிய வர்த்தகங்களை மேற்கொண்டுள்ள நபர்களிடம் இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மில்லியன்ரூபா முதல் மூன்று மில்லியன் ரூபாவரை பணத்தை இவர்கள் கேட்டுள்ளதாகவும் எனினும் பணத்தை கொடுக்க வர்த்தகர்கள் மறுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
பிரதமரை தோற்கடிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் பணம் கேட்டதாக குறித்த வர்த்தகர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களை சொந்தமாக கொண்டுள்ள சில வர்த்தகர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகிறது.
Post a Comment