புதிய வழியில், முன்னோக்கி செல்ல முடியும் - ரணில் விக்ரமசிங்க
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று -12- கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்த முடியும். புதிய வழியில் முன்னோக்கி செல்ல முடியும் என நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் இனவாதிகளான பலசேனாக்களையும், சம்பிக்கைகளையும் அடக்கி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாத பிரதம மந்திரியும், ஜனாதிபதியும் இருக்கும் வரை எந்த புது வழியும் வேலைக்காவாது. மிகவிரைவில் தேர்தல் வைக்கப்படுவதுதான் சாலவும் சிறந்தது.
ReplyDelete