தோல்வியடைந்தாலும், எமக்கு வெற்றியே - மகிந்த
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று,மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,
“சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், முடிவு மாறியிருக்கும்.
முதலில் எமக்கு 54 வாக்குகள் தான் இருந்தன. இப்போது, 76 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இது எமக்கு வெற்றி தான்” என்று அவர் தெரிவித்தார்.
It seems ... He is sure that... RANIL will protect him from all the cases against to him.
ReplyDeleteமீசையில் மண் படவில்லையாம்.
ReplyDelete