அரசாங்கத்தை கைப்பற்றும், நடவடிக்கை தொடரும் - கூட்டு எதிரணி
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்க ஜனாதிபதி தலையிட முன்வராமையினால், மீண்டும் ஒரு முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாரைவார்த்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுன தனது கட்சியின் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது தனியான ஒரு கருத்துக்கு ஒருமுகப்படுத்த முன்வராமை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை இதற்கு ஆதரவாக ஜனாதிபதி பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையிலேயே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும், அரசாங்கத்தை கைப்பற்றும் நடவடிக்கையை கூட்டு எதிரணி ஒருபோதும் கைவிடாது எனவும் பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2040 will try prasanna greedy boy
ReplyDelete