ஒற்றைக்காலில் நின்ற ஹரீன், ரஞ்சன், மரிக்கார் - அடியோடு நிராகரித்த ரணில்
-எம். ஏ. எம். நிலாம்-
பிரதமர் மீதான நம்பிக்ைகயில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து கட்சி மறுசீரமைப்பு நடவடிக்ைககளைத் துரிதப்படுத்தும் பொருட்டு முதற்கட்ட நடவடிக்ைக யாக மறுசீரமைப்புக் குழுக்களின் சிபார்சுகளை ஆராயும் முதலாவது கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் , ரஞ்சன் ராமநாயக்க, எஸ். எம். மரிக்கார் உட்பட பலரும் விமர்சனப் போக்கில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எந்தப் பணிகளையும் தங்களால் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தனித்து ஆட்சியை அமைப்பதே ஒரே வழியெனவும், நம்பிக்ைகயில்லா பிரேரணையின் போது பிரேரைணயை ஆதரித்த அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்ைககளை முற்றாக நிராகரித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2020 வரை நல்லாட்சியை தொடர ஜனாதிபதியுடன் இணக்கம் கண்டிருப்பதாகவும் தனித்து ஆட்சி அமைப்பதோ பிரேரணைக்கு ஆதரவளித்தவர்களை வெளியேற்றுவதோ உகந்ததாகக் காணப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை இந்தத் தருணத்தில் காட்ட முடியாமை பற்றியும் பிரதமர் இங்கு சுட்டிக் காட்டியுள்ளார். அமைச்சரவையை மறுசீரமைக்கும் போது ஜனாதிபதியுடன் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படுமெனவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.
Post a Comment