எங்களுக்கு எதிராக துரிதமாக நம்பிக்கையில்லா, பிரேரணை கொண்டு வாருங்கள் -சு.க. அமைச்சர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களுக்காக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை துரிதமாக கொண்டு வருமாறு கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்குகளை மட்டுமே வழங்கினர்.
எனினும், கூறுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை கூற துரிதமாக மேடை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
தேசிய அரசாங்கம் அவசியம் இல்லை என்றால், ஐக்கிய தேசியக்கட்சியின் தனியான அரசாங்கம் அவசியம் என்ற யோசனையை முன்வைக்குமாறு கோருகிறேன்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஜனாதிபதியே முடிவுகளை எடுக்க முடியும் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சந்திம வீரக்கொடி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment