Header Ads



அரசியல் என்ற சதுரங்க பலகை, அமைதியாக செல்ல இடமளிக்கக் கூடாது - விமல்

எதிர்வரும் 5ஆம் திகதி காலை விடியும் போது பிரதமர் தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குள் தோற்கடிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் என்ற சதுரங்க பலகை அமைதியாக செல்ல இடமளிக்கக் கூடாது. காய்கள் நகர்த்தப்பட வேண்டும். ஏனைய காய்களை தானாக நகர்த்தவே பிரதமர் என்ற காயை முதலில் நகர்த்தப்பட்டது.

மேலும் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாது நாட்டில் தற்பேது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாட்டில் பாதாள உலகத்தினர் தினமும் உயிர்களை கொன்று வருகின்றனர். நாட்டில் தற்போது நிர்வாகம் ஒன்றில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.