Header Ads



ஆசிபா உங்கள் மகளாக இருந்தால், என்ன செய்வீர்கள்..?

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

உத்தரப் பிரேதசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், அவரின் நண்பர்களும் சேர்ந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது இளம்பெண் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டபெண்ணின் தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் காவல்நிலையத்தில் நிலையத்தில் அவர் மர்மமாக உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கு சிபிஐ மாற்றப்பட உள்ளது.

இதேபோல, காஷ்மீர் மாநிலம் கதுவா நகரில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து ஐபிஎல் டெல்லி அணியின் தலைவர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் தமது ருவிட்டர் பக்கங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

இந்தியர்களின் மனசாட்சி உன்னாவ் நகரிலும், கதுவாவிலும் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது, நம்முடைய சட்டங்களையும், செயல்படுத்தும் முறைகளையும் கொலை செய்து இருக்கிறது. தவறு செய்தவர்கள் இந்த நிர்வாக முறையால் தண்டிக்கப்படுவார்களா?. நான் சவால் விடுகிறேன் என கம்பீர் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக களமிறங்கும் வழக்கறிஞர் தீபாகா சிங் ரஜாவத் தடுக்கப்படுகிறார். ஏன் அவருக்கு இத்தனை தடைகள் விதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களை நினைத்து வெட்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி உங்களில் ஒருவரின் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள்?” எனவும் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோன்று இது உண்மையில் இரக்கமுள்ள நாடுதானா என்பதனை நான் மட்டுமல்ல இந்த உலகமும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறது.

நம்முடைய இனம், பாலினம், மதம் ஆகியவற்றை மறந்து கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க நாம் குரல் கொடுக்காவிட்டால், நாம் இந்த உலகில் வேறு எதற்கு நாம் ஆதரவாக குரல்கொடுக்கப் போகிறோம். மனிதநேயத்துக்கு கூட ஆதரவாக நாம் பேசமாட்டோமா.

கதுவாவில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும். நம்நாட்டின் நீதித்துறை மீதும், நீதிபரிபாலன முறை மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அது குலைந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. இவர்களெல்லாம் பக்தர்கள் போர்வையில் வாழும் சைத்தான்கள்

    ReplyDelete
  2. ஈவு இனக்கம்யின்றி சுட்டு தள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.