ஐ.தே.க. க்கு ஜனாதிபதி எச்சரிக்கை
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஐக்கியதேசிய கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தால் அவர்கள் பொது எதிரணியுடன் இணையக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்தவேளையே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடுமாறு சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபடும் மேலும் கட்சியின் உறுப்பினர்கள் பொது எதிணியுடன் இணையக்கூடும் எனவும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுஎதிரணி ஆட்சியமைக்ககூடிய சூழல் உருவாகலாம் என சிறிசேன எச்சரித்துள்ளார்.
அவ்வாறான நிலை உருவானால் தன்னால் எதுவும் செய்ய முடியாதநிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மங்கள சமரவீர ஹரின் பெர்ணான்டோ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறிசேன, ஏன் அவ்வாறான நிலையில் அமைச்சரவையில் இருக்கவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Problem strated between My3 & UNP. Mahinda is successful in bringing the No Confidence Motion.
ReplyDelete