ரணில் விலக வேண்டும் - பிடிவாதத்துடன் ஜனாதிபதி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகி அரசாங்கத்தை பாதுகாக்க உதவுமாறு ஜனாதிபதி இவர்களிடம் கோரிக்கை விடுக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியினர் சாதகமான பதிலை வழங்காது போனால், ஜனாதிபதி நாளைய தினம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்த ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம உட்பட அந்த கட்சியின் மூத்த அமைச்சர்களை இன்று மாலை தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் மதியம் ஐக்கிய தேசியக்கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து பிரதமர் ரணில் விக்ரசிங்க வெற்றி பெற்றாலும் அவருடன் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் ராஜாங்க அமைச்சர்களான அஜித் பீ. பெரேரா, எரான் விக்ரமரத்ன, ஹர்ச டி சி்ல்வா ஆகியோரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளதுடன் இதன் போது தனது இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றால் என்ன செய்ய வேண்டும் என ஜனாதிபதி இவர்களிடம் வினவியுள்ளார்.
அதேவேளை நேற்று கருத்து வெளியிட்டிருந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா, நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் பிரதமர் பதவி விலகுவதை வெளிப்படையாக கூறாவிட்டாலும் பிரதமர் பதவி விலகுவதை ஜனாதிபதி எதிர் பார்ப்பது மட்டும் தெளிவாக தென்படுவதாக தென்னிலங்கைச் செய்திகள் கூறுகிறன்றன.
God bring good decision in this matter.ranil backround mosaad.totally corrupted arragond fellow
ReplyDelete"The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, he has also betrayed the Muslims since he came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".
(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 17:71)
www.tamililquran.com