Header Ads



சகல மத்ரஸாக்களுக்குமான, பணிவான வேண்டுகோள்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்ற போது சான்றிதழ்கள் அரச கரும மொழிகளான சிங்களம்/தமிழ் அல்லது இரண்டாம் மொழி ஆங்கிலத்தில் இருக்கும்படி வேண்டப்படுகின்றனர். 

அதிகமான மத்ரஸாக்களில் சான்றிதழ்கள் ஒரே பக்கத்தில் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. அதிகமான நேரங்களில் இவை உறுதிப்படுத்த முடியாதவைகளாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நிராகரிக்கப்பட்டு தனி ஆங்கில மொழியில் மாத்திரம் சமர்ப்பிக்குமாறு மாணவர்கள்/மௌலவிமார்கள் வேண்டப்படுகின்றனர். இதனால் அனேகமான மெளலவிமார்கள்/மாணவர்கள் கால விரயம் மற்றும் பண விரயம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எனவேதான் மத்ரஸாக்களில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற போது ஆங்கிலத்தில் தனியாகவும் அரபு மொழியில் தனியாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போது இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
(ஒரே தாளில் இரண்டு பக்கமும் அச்சிட்டு வழங்குவதையும் தவிர்ந்து கொள்வது நல்லது. தனித்தனியாக இரண்டு மொழிகளிலும் இருப்பது சாலச்சிறந்தது)

SM. Saheeth
B.Sc. Estate Management & Valuation (SJP)
(அனுபவத்தில் இருந்து)

No comments

Powered by Blogger.