கூட்டு எதிர்க்கட்சி மீது ஜனாதிபதி, நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொன்சேகா
கூட்டு எதிர்க்கட்சியினர் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்தின் கூட்டு பொறுப்புக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று -06- ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எந்த வகையிலும் நாட்டை எண்ணி கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, சீக்கிரமாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தனர்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்ததன் மூலம் முட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முயற்சித்தனர் எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment