Header Ads



'சம்பந்தன் பதவி விலக வேண்டும்' - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை  கூட்டு எதிரணியினர்  சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நிரூபித்து விட்டனர். தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல இ அவர்கள் பிரதமரின் கைபாவை பொம்மைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில தெளிவுப்படுத்தும்  போது மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

2 comments:

  1. தண்ணீரில் இருந்த மீனை பிடித்து கரையில் விட்ட மாதிரித்தான் இவர்கள் துடிக்கிறார்கள் பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. எடுபடாத பிரேரணையை
    எதிர்த்த காரணத்துக்காக,
    எதிர்க் கட்சித் தலைவர், தம்
    எதிர்க்கட்சிப் பதவிக்கு
    எதிராக வாக்களித்ததாக,
    எதிர் வாதம் புரியும் நீங்கள்,
    எதிரணியின் கொள்கைதான்
    என்னவென்று சொல்லுங்களேன்!

    எடுத்ததை எல்லாம்
    எதிர்க்க வேண்டும்
    என்பதற்குத்தான்
    எதிர்க் கட்சி வரிசை
    என்று வாதிட்டால்கூட, அவர்
    எடுத்த முடிவு
    என்றுமே சரிதான் ஐயா!

    ReplyDelete

Powered by Blogger.