Header Ads



முஸ்லிம்கள் மீதான கண்டி கலவரம் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுங்கள்

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி காலப்பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இதன் கீழ் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ​பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது. இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். புகைப்படங்கள், கானொலிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியும். 

எழுத்து மூலமான இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது அவற்றை பிரதேச இணைப்பு அதிகாரி கண்டிப் பிரதேச அலுவலகம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலக்கம் 8/1, பிரைம்ரோஸ் வீதி, பேராதனை வீதி – கண்டி என்ற முகவரிக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 081 2 228 009 அல்லது 070 3 654 901 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்

No comments

Powered by Blogger.