சு.க. அமைச்சர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள்
அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பினை பாதுகாக்க முடியாவிட்டால், அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுமாறு கோர ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு பின்னர் வெளியே சென்று அரசாங்கத்தை கண்ட இடங்களிலும் விமர்சனம் செய்வது தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்ய விரும்பினால் அரசாங்கத்தை விட்டு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறச் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமருக்கு எதிராக மட்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லைஇ ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம்.நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அரசாங்கம் கலைந்து விடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆளும் கட்சியில் இருந்து கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது தார்மீக ரீதியில் ஏற்புடையதல்ல.
எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோர உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment