நம்பிக்கையில்லா பிரேணையின் போது உணவுக்கு தட்டுப்பாடு
நாடாளுமன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உணவின்றி தவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது இரவு உணவு தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அன்றைய தினம் இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட பிரபல அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலருக்கு நாடாளுமன்றத்தில் உணவு கிடைக்கவில்லை.
போதுமான அளவு உணவு தயாரிக்காமையே அதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
சாதாரண நாட்களில் நாடாளுமன்றத்திற்கு இரவு உணவிற்காக இடியப்பம், பிட்டு மற்றும் பான் போன்ற உணவு பொருட்கள் வெளியே இருந்து கொண்டுவரப்படும்.
எப்படியிருப்பினும் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இடம்பெற்ற தினத்தன்று இரவு உணவிற்காக பான் மற்றும் நூடில்ஸ் மாத்திரமே கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு போதுமான அளவு உணவு தயாரிக்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment