Header Ads



நுவரெலியாவை முஸ்லிம்கள், புறக்கணிப்பது முட்டாள்தனமா..?


-Inaas-

நுவரெலிய சனத்தொகை

சிங்களவர்கள் சனத்தொகை 282,053
முஸ்லிம்கள்,தமிழர்கள் 427,762

இன்று அனைத்து தரப்பிலும் நுவரெலியா செல்ல வேண்டாம். 
நுவரெலியாவை புறக்கணியுங்கள். 
அவர்களுக்கு பொருளாதாரரீதியாக பதிலடிகொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரம் எல்லா தளங்களிலும் பரப்பபட்டு வருகிறது.

உண்மையில் இது ஒரு புத்திசாலித்தமான முன்னெடுப்பா?
உண்மையில் இந்த முன்னெடுப்பு எமது எதிரிகளை பலிவாங்குவதாக அமையுமா?
ஏன்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

நாம் அனைவரும் திகன சொந்தங்களுக்கு உதவ வேண்டுமென்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

அதற்காக இப்படியான அறிவுபூர்வமற்ற பிரச்சாரத்தை கொண்டு செல்வது நம்தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வதற்கு சமன்.

மேலே உத்தியோகபூர்வ சனத்தொகையின் படி 
சிங்களவர்கள் நுவரெலியாவில் 39 வீதத்தினர்
மீதி 61 வீதத்தினர் முஸ்லிம்களும் தமிழர்களும்.

நுவெரலிய டவுனில் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் ஹோட்டல்களும் இருக்கின்றன. 
மிலானோ ஹோட்டல்உட்பட. 
நுவரெலியா மஸ்ஜிதுக்கு பாரியதொரு வருமானமும் April சீசனால் கிடைக்கின்றது.

மேலும் உத்தியோகபூர்வ சனத்தொகை மதிப்பீட்டில் முஸ்லிம்களும் தமிழர்களும் குறைத்தே காட்டப்படுகின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுவரெலியா சிங்களவர்களை பொறுத்தவரை விவசாயம் செய்பவர்களே அதிகம்.

வியாபாரம் என்று வரும் போது அங்கு முஸ்லிம்களின் பங்கு அதிகம்.
இந்த புறக்கணிப்பால் சிங்களவர்களைவிட 
அதிகம் பாதிப்பு உள்ளாகப் போபவர்கள் தமிழர்கள் தான்.
சிங்களவர்கள் அல்ல.

அது மட்டுமல்ல எங்களை தாக்க வந்தவர்கள் தெற்கின் துவேச சிங்களவர்கள். கைதுசெய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தெற்கை சேர்ந்தவர்கள். 
ஒரு சில இனவாதிகளின் செயல்களுக்கு நாம் இன்னொரு பகுதிசாரரை பலி வாங்குவது சரியல்ல.

அப்படியே புறக்கணிப்பு நடாத்துவதாக இருந்தால் தெற்கை மையப்படுத்தி அதனை செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

இந்த ஏப்ரலில் நடக்கப் போகும் வியாபாரத்தை, வருமானத்தை வைத்து தான் பலர் 
இந்த முழு வருடத்தையும் ஓட்ட இருக்கிறார்கள். 
அவர்களில் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட வேண்டாம்.
நுவரெலியா புறக்கணிப்பு என்ற பெயரில். 

பெரும்பாலும் முஸ்லிம்கள் நுவரெலியா சென்றால் முஸ்லிம் வீடுகளில் தங்குபவர்களே அதிகம். நுவரெலியாவின் சில முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்காகவே தமது வீடுகளை வாடகைக்கு கொடுக்க தயாராக்கி வைத்திருப்பார்கள். 

இன்னும் 100% முஸ்லிம்கள் 
பெரும்பாலும் முஸ்லிம் ஹோட்டல்களிலும்  முஸ்லிம் வீடுகளில் தயாரித்த உணவையே உட்கொள்கிறார்கள். 
நுவரெலியா டவுனுக்கு வெளியில் வாழும் பல முஸ்லிம்கள் உணவுப் பார்சல்களை தயாரித்துகொண்டு வந்து டவுனில் விற்பனை செய்கிறார்கள். 

இவ்வாறனவர்கள் முழுமையாக நம்பியிருப்பது முஸ்லிம்களையே. 
இவ்வாறான சிறு வியாபாரிகளையும் நமது புறக்கணிப்பு பாதிக்கும் என்பதே எனது அவதானம்.

திகன மக்களுக்கு கட்டாயம் நாம் உதவ வேண்டும்
சுன்னத்தான் உம்ரா பயணத்துக்கு கிழமைக்கு 4 கோடிக்கும் அதிகம் செலவழிக்கறிது இலங்கை முஸ்லிம் சமூகம்.  இதில் பலர் இரண்டாம் தடவை அல்லது அதற்கு மேற்பட்ட தடவை உம்ரா செல்பவர்கள். 

இவ்வாறனவர்கள் யோசிக்கலாம் தமது இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை உம்ராவுக்கு செலவழிக்கும் பணத்தை திகன சொந்தங்களுக்கு செலவழிக்கலாம். 

முதலாம் தடைவ செல்பவர்களும் இப்படி செய்தால் உம்ரா செய்ததனை விட பாரிய நன்மைகள் அல்லாஹ்வின் புறத்தால் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு சகோதரனுக்கு உதவ எழும்பி செல்வது, மஸ்ஜிதுன் நபவியில் 1 மாதம் இஃதிகாப் இருப்பதனை விட சிறந்த அமல் என நபியவர்கள் ஆதாரபூர்மான ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ளார்.

உணர்ச்சிக்கு கட்டுபட்டு திடீர் முடிவுகளை எடுத்து, எமது அழிவை நாமே தேடிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நிதானமாக சிந்தித்து, சவால்களுக்கு முகம் கொடுப்போம்

8 comments:

  1. முகம் மூடி தெருக்களில் அலைந்து ஒரு பிரச்சினை தேவைதானா?

    ReplyDelete
  2. even it was suggested why this should be given prominence in the news feeds.

    ReplyDelete
  3. Some time some of its give this type of fatwa not knowing the consequence.
    Who cares about this .
    We have more idiots fatwa making facotiess that common sense.
    Think carefully before you say something .if you do not know read fiqh that deals with the consequence of human actions

    ReplyDelete
  4. evar eluthi erukkuratha parththa evarukkum nastam erukkdupola ana poratha thavirkirathu than sari kudumbangala sandiththu avarhalukku etho erukkiratha kodutthu warathu thane rooms ukku ayirak kanakkila kodukkiratha vida

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்களின் பலருக்கும் அதுதான் முக்கியம் என்றிருந்தால் தாராளமாய் சென்று வாருங்கள் உங்கள் அங்குள்ள வியாபாரிகள் வள்ளல்களாக வழம்றெட்டும்.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. April is festivalperiod for Budist.. Not for Muslims. Further picnic in this situation with islamicidentity... The racist if purposely create problem... what will you do? will police protect you ? Why wasting money and time.... sit at home and masjid and make Ibada. If you want to help nuwataliya Muslims ... make yourvisit another time and pay them ...


    Our goal is next world.. not picnic.

    May Allah guide us.

    ReplyDelete
  7. கட்டுரையாளரே உங்கள் சனத்தொகை கணிப்பீடு உண்மைதான் ஆனாலும் அங்கு வீடுகளை வாடகைக்கு விடுபவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்களல்ல.....
    மேலும் பல high end hotels உம் முஸ்லிமலகளுக்கு சொந்தமானதல்ல... நம்மவர்கள் தங்குவது அப்படி விளை உயர்ந்த ஹோட்டல்களில் தான்.. ஆகவே அங்கு போகாமல் இருப்பதுதான் சிறந்தது..
    அதுவும் இந்த புத்தாண்டு தினங்களில்... இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நோன்பு பெருநாள் சீசன் வருகிறது அதில் போகலாமே!

    ReplyDelete
  8. For my concern, all Muslims in Sri Lanka should not go to Nuwara Eliya becouse at present situation is very worst and it is possible creating another problem with Muslims. hence, the Sinhala extremism are too jealous on Muslim because they are enjoying their life rather than Sinhala peoples.

    ReplyDelete

Powered by Blogger.