"சபாநாயகர் ஆசனத்தில், திலங்க சுமதிபால அமரக் கூடாது"
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, பிரதி சபாநாயகர், திலங்க சுமதிபால, சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
பிரதி சபாநாயகரின் உறவினர்களுக்கு சொந்தமான பத்திரிகையில், பிரதமருக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள ஐ.தே.கவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல, பிரதமருக்கு எதிராக, பிரதி சபாநாயகர், திலங்க சுமதிபால நேரடியாகவே குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், எதிர்வரும் 4 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, திலங்க சுமதிபால, சபாநாயகரின் ஆசனத்தில் அமரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment