Header Ads



வாக்கெடுப்பிற்கு சில நிமிடங்களே உள்ள நிலையில், சு. க. அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பிற்கு சில நிமிடங்களே உள்ள நிலையில் சுதந்திர கட்சி அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் , அவர்கள் அமைச்சுப்பதவியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , தயாசிறி ஜயசேகர , டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி , அனுராத ஜயரத்ன , சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை மற்றும ்சுசந்த புஞ்சி நிலமே ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.