அரசின் வாக்குறுதி காற்றில் பறந்தது, வன்முறைக்குள்ளான முஸ்லிம்கள் கவலை
கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்பு புனர்நிர்மாணிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் இதுவரை எந்தவொரு பள்ளிவாசலோ, வீடோ, கடையோ புனரமைக்கப்படவில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் மே மாதம் நடுப்பகுதியில் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்நோக்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களும், வீடுகளும் கடைகளும் நோன்புக்கு முன்பு புனரமைக்கப்படவேண்டும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்செயல்களினால் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் 289 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் மற்றும் 217 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 3 பள்ளிவாசல்கள் முற்றாக எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளையும் தங்கள் பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர் என உலமா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வன்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்கள் தொடர்பாக உலமா சபை கண்டி மாவட்டக்கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் கலந்துரையாடியுள்ளது. உலமா சபையின் கண்டி மாவட்டக்கிளை காரியாலயத்தில் அமைச்சர் ஹலீமுக்கும், உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கண்டி வன்முறைகள் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைளை அமைச்சர் ஹலீம் நேரில் சென்று பார்வையிடும்போது...
இது தொடர்பில் அகில இலங்கை உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளைத் தலைவர் மௌலவி எச்.உமர்தீன் ‘விடிவெள்ளி’க்கு கருத்துதெரிவிக்கையில், "அரசாங்கம் உறுதியளித்தபடி சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் திருத்தியமைக்கப்படவில்லை.
தற்போது கண்டிப் பகுதியில் தொடராக மழைபெய்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீடுகள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டதால் பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். மேலும் சிலர் இரு மாதகாலத்துக்கே வாடகை வீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது வன்செயல் இடம்பெற்று இருமாதகாலம் அண்மிக்கப் போகிறது.
பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகளை ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்பு புனரமைத்துத் தருவதாக இராணுவத் தளபதி உறுதியளித்திருந்தாலும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. உலமாசபை இதுதொடர்பாக அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், லக் ஷ்மன் கிரியெல்ல ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
நஷ்டஈடுகள் வழங்கப்படுவதும் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாத நடுப்பகுதியில் நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் நோன்புக்கு முன்பு பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளும், பள்ளிவாசல்களும் கடைகளும் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதன் பிறகும் பொறுமை காக்கமுடியாது. நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போகிறோம் என்கிறார்கள். நாம் அவர்களை பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்.
எனவே நோன்புக்கு முன்பு புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்" என்றார்.
-Vidivelli ARA.Fareel
Please don't blame our Ranil government. Unp is muslim's party
ReplyDeleteயாழ்ப்பாணம்,அழுத்கம,ஹிந்தோட்ட,அம்பாறை,(கண்டி 1915) எல்லா இனவாதச்செயலால்
ReplyDeleteபாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்ட ஈடு கொடுத்து முடிந்துதானே.
திகன மட்டும்ம்தான் பாக்கி அதையும் கொடுத்துவிடுவார்கள் போடாங்கோய்யால.
இன்னும் இந்த அரசாங்கத்தை நம்பி நம்பி குடுங்கள் வாக்க்கை.