Header Ads



ஒரு முஸ்லிம், ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா..?

மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, அவர் முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

புதிய ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக்காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்திற்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.

இவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா?

எமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமையே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் சபைத் தலைவர்களாகியுள்ளனர்.பல  சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும் அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே பயன்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.

6 comments:

  1. There is no purpose served in appointing a Muslim just for the sake appointing a Muslim. Alavi Moulana was there what did he achieve for the Muslims. A person from any community who will serve everyones interest without differences is what is needed. Namal is now talking as if he is sympathetic to the Muslims. Wasim Thajudeen was a Muslim that Namal's family killed. His father's govt. allowed when the Dambulla Mosque was attacked. Muslims were attacked in Alutgama and his father said he was in America at that time and he did not know. What a fake excuse. All this time there Muslims politicians in his govt. who did nothing.

    ReplyDelete
  2. MR GOVT NO POWER FOR GOVERNER

    ReplyDelete
  3. 10 வருடங்களுக்கு முன்னர், உங்க அப்பரு சொன்னாரு.. “இலங்கையில் இனவாதம் இல்லை, இருப்பது பயங்கரவாதம் மட்டுமே என்று”.

    உடனே, நம்மட முஸ்லிம் மகா ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்று, ஒருமித்த குரலில் “ஆமாம் சேர்” என்றார்கள்.

    இப்ப, கண்டியிலே, சும்மா விளையாட்டுக்கு 2, 3 கடைகளை எரித்தவுடன் “இருக்கு சார்” என்கிறார்கள் .

    ஒரே குழப்பம். இலங்கையில் இனவாதம் இருக்கா, இல்லையா?

    ReplyDelete
  4. MR.ANTONY இலங்கையில் இனவாதம் இருக்கு அதில் நீரும் ஒரு உறுப்பினர்தான்

    ReplyDelete
  5. @mustfa, ok. நீங்க?

    இலங்கையில் இனவாதம் எப்போதிலிருந்து இருக்கு?

    ReplyDelete
  6. இலங்கை வரலாற்றில் 1915 ஆண்டு அரசியல் ரீதியான முதலாவது மதக்கலவரம் கண்டியில்
    ஆரம்பித்து வைக்கப்பட்டது நாடுபூராகவும் இனவாதிகளினால் முஸ்லிம்களின் பொருளாதாரம்
    சூரையாடப்பட்டது.

    அந்த சமயத்திலும் சிங்கள இனவாதிகளுக்கு உதவியாக முஸ்லிம்கலை காட்டிக்கொடுத்தது
    சேர் பொண் ராமநாதன் போன்றவர்களதான். இதுதான் இனவாத்த்தின் உச்சக்கட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.