பாராளுமன்றத்தில் இன்று, சம்பந்தன் ஆற்றிய உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் உரையாற்றிய -04- கூடடமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.
‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.
தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் ஆணை, கூட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்.
2015 தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்களின் ஆணைக்கு மாறாக நாடாளுமன்றம் செயற்படக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment