Header Ads



புதிய பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் - ஜனாதிபதி

-Dc-

பிரதமரின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள குழுவினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டால், தமது கட்சிக்கு அமைச்சர்கள் வழங்கும் போது குறைவாகவே வழங்கப்படும் என அக்குழுவிலுள்ள சிலர் கருத்துத் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் ஒதுங்கியிருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஏற்கனவே அறிவித்துள்ளது.

அவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அரசாங்கமொன்று அமையும் பட்சத்தில் தமக்கு முக்கிய அமைச்சுக்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் அக்குழுவிடையே இரு கருத்துக்கள் உருவாகியுள்ளன.

இதேவேளை, நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் எனக் கூறியிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  

1 comment:

Powered by Blogger.