Header Ads



ஐ.தே.க. சமர்ப்பித்த அமைச்சரவை பட்டியலை, நிராகரித்த ஜனாதிபதி

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது தமது கட்சிக்கு என்னென்ன அமைச்சுகள் வேண்டுமெனக்கோரி ஐக்கிய தேசியக் கட்சியால் முதலில் முன்வைக்கப்பட்ட பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்துஅறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவையில் முழுமையானதொருமறுசீரமைப்பை செய்வதற்கு ஜனாதிபதி உத்தேசித்திருந்தாலும், அமைச்சுகளுக்கானதுறை ஒதுக்கீடு அறிவியல்பூர்வமாக இடம்பெற வேண்டும் என்பதற்காக அதை தற்காலிகமாகஜனாதிபதி ஒத்தி வைத்தார்.

அத்துடன், அமைச்சர்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பீடு செய்து,யார் யாருக்கு எத்தகைய அமைச்சுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்துஅறிக்கையொன்றை வழங்குமாறு தனது செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்திருந்தார்.

அவர், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்தும் மாதிரிபட்டியலொன்றை கேட்டிருந்தார்.இதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட முதல் பட்டியலேநிராகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்சுகளை ஐ.தே.க.கோரியிருந்ததுடன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

லண்டனில் இருந்தவாறே மேற்படி கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளாரெனஅறியமுடிகின்றது.

இதன் பின்னர் மீண்டுமொரு பட்டியலை ஐ.தே.க. கையளித்தது என்றும், அதற்குஜனாதிபதித் தரப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது என்றுள்ளது.

No comments

Powered by Blogger.