இலங்கையில் ரஷ்யாவின், இராணுவ ஆதிக்கம்..?
ரஷ்யாவுடனான இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான உடன்பாட்டில் கையெழுத்திடும் யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், இந்த இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த செவ்வாய்கிழமை அனுமதி அளித்துள்ளது.
Post a Comment