Header Ads



ஹெலிகொப்டர் தயாரித்து, சாதனை படைத்த இலங்கை மாணவன்

இலங்கையில் மாணவன் ஒருவர் பறக்கும் ஹொலிகொப்டர் ஒன்றை சுயமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

திம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் நான்கு பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் ஹிரத்த பிரசாத் என்ற மாணவரே இவ்வாறு ஹெலிகொப்டரை தயாரித்துள்ளார்.

பாடசாலையில் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சிக்காக அவர் அந்த ஹெலிகப்டரை தயாரித்து சமர்ப்பித்துள்ளார்.

ஹெலிகொப்டரை தயாரிப்பதற்கு சுமார் மூன்று மாதங்களை செலவிட்டுள்ளார்.

தயாரிப்புக்காக தகடு, இரும்பு, தையல் இயந்திரங்களின் பகுதிகள், கணினி பகுதிகள் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர் இதற்கு முன்னர் பல புதிய நிர்மாணிகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.

தான் தயாரித்த ஹெலிகொப்டரை வானில் செலுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு குறித்த மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.