ஜனாதிபதி காட்டிக் கொடுத்துவிட்டார் – நாமல் குமுறல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் காட்டிக் கொடுத்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி காட்டிக் கொடுப்பதனை பழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முதலில் ஜனாதிபதி மைத்திரியே ஊக்கமளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொள்கை அடிப்படையில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment