கொழும்பு செல்வோருக்கு, விசேட எச்சரிக்கை
புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை, மஹரகம, நுகேகொட உட்பட அதற்கு அருகில் உள்ள நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர், திருடர்களிடம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக புதுவருட காலப்பகுதியில் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் நகரத்திற்கு அருகில் அதிகமாக சுற்றித்திரிகின்றனர். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகமான பணத்தை பைகளில் எடுத்து கொண்டு வருகின்றனர். திருடர்கள் பைகளில் உள்ள பணத்தை திருடி செல்வார்கள். தங்கள் பிள்ளைகளின் தங்க சங்கிலி போன்றவை தொடர்பில் அவதானமாக இருங்கள்.
அதேபோன்று தங்கள் வாகனங்களை நிறுத்திய பின்னர் அது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.
பொருட்கள் கொள்வனவு செய்ய செல்லும் போது வாகனத்திற்குள் இன்னுமொருவரை விட்டு செல்வது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment