ராஜிதவும், மகனும் யானையுடன் சங்கமம்..?
அமைச்சர் ராஜித மற்றும் அவரது மகன் சதுர ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் இடம்பெற்ற போது அதில் குறித்த இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத இவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் குறித்த இருவரும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment