தாமரை கோபுரத்தை, திறப்பதில் தாமதம் ஏன்..?
ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தை திறப்பதற்கு மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரத்தின் ஆய்வு நடவடிக்கைகள் இதுவரையிலும் நிறைவு செய்யப்படாமையினால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் சமித மானவடு தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்திற்கு பொருத்த வேண்டிய சில உபகரணங்கள் வழங்குவதற்கு நிறுவனம் தாமதப்படுத்தியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் உறுதி செய்யப்பட்ட பின்னர் தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட பின்னர், ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் அதிசயம் காட்டப்போரார்கள்.
ReplyDelete