நம்பிக்கையில்லாப் பிரேரனையை தேல்வியடையச் செய்யத் தயார் - ராஜித
சுகாதரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களின் தனிப்பட்ட நிதியினால் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட நலன்புரிச் சங்களுக்கான கதிரைகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் பதுரலிய மொரபிடிய பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர்:
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை தோல்வியடையச் செய்வதற்கு அரசாங்கம் செயற்படுகின்றது. பிரதமர் சம்பந்தமாக பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் பொது மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்குவதற்கு முழு முனைப்போடு செயற்படுகின்றது. என்றாலும் இந்த சேவைகளை மக்கள் அறியாமல் இருக்கின்றார்கள். இது சம்பந்தமாக ஊடகங்கள் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.
சென்ற அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவே நஷ்டஈடாக வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வீட்டை மீள் கட்டுமானம் செய்வதற்காக 16 லட்சம் ரூபாக்களை நஷ்டஈட்டுப் பணமாக வழங்குகின்றது. இது சம்பந்தமாக மக்கள் அறியாமல் இருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கம் இவற்றை பெரும் விழாக்கள், நிகழ்வுகள் வைத்து வழங்கவில்லை. ஆரவாரமின்றி மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வேறெந்த அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டது கிடையாது என்றே கூற வேண்டும்.
அரசியல் மேடைகளில் இவைகளே பேசப்பட வேண்டியவை. ஆனால் வழமைக்கு மாற்றமாக அரசாங்கத்தினுள் இருந்து கொண்டே சில அமைச்சர்களும் உறுப்பினர்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் நம்பிகையில்லாப் பிரேரனையை அரசாங்கம் வெற்றி கொள்வதற்கு சகல ஏற்பாடுகளையும் முன்னெடுக்கும் என்பது உறுதி.
Post a Comment