பூமியில் மோதவுள்ள, சீனாவின் ஆய்வுநிலையம் - இலங்கைக்கு ஆபத்தா..?
விண்வெளியில் பழுதடைந்த சீனாவிற்கு சொந்தமான ஆய்வு நிலையம் நாளை பூமியில் மோதவுள்ளதென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்வெளி ஆய்வு நிலையம் இன்றிரவு இலங்கைக்கு 479 கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என, கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இயக்குனர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உடைந்து விழும் விண்வெளி மையத்தின் பிரதான பகுதியில் இலங்கையில் விழாதெனவும், இது தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிதைந்த விண்வெளி மையம் விழும் இடத்தை சரியாக கணித்து கூற முடியாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய நாளைய தினம் மலேசியாவுக்கு அருகில் இந்த விண்வெளி நிலையம் உடைந்து விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சீனா விண்ணில் செலுத்திய டியாங்காங்-1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இதைத் தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் என விஞ்ஞானிகள் முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.
சுமார் 8500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் போது, விண்கல் மோதிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Post a Comment