ரணில் - சம்பந்தன் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. முன்னதாக இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்திருந்தார்.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சந்திப்பின் பின்னர் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை பிரதமருடன் அவர் சந்திப்பொன்றை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான முழுமையான விபரம் தற்போதுவரை வெளியாகவில்லை.
Post a Comment