Header Ads



கண்டி வன்முறையுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு, புத்தாண்டின் பின் சட்டநடவடிக்கை

கண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய விசாரணைகள்
இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

புத்தாண்டின் பின்னர் இது பற்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

கிராமிய மட்டத்தில் சமாதான குழுக்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

ஐக்கிய நாடுகளின் சகவாழ்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் கீதா சகவார்ரோடு இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

1 comment:

Powered by Blogger.