Header Ads



கொழும்பு நீதிமன்றத்தில், இப்படியும் நடந்தது

மார்­புக்­கச்­சைக்குள் மறைத்து, ஹெரோயின் போதைப்பொரு­ளை நீதி­மன்­றுக்கு எடுத்து வந்து, வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக அழைத்து வரப்­பட்ட விளக்­க­ம­றியல் கைதி ஒரு­வ­ருக்கு   அதனை வழங்க முற்­பட்ட பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் நேற்று கைது செய்­தனர்.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் சந்­தேக நபர்களைத் தடுத்து வைக்குமிடத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்­த­தா­கவும் அவ­ரிடமிருந்து கைதிக்கு வழங்க முற்­பட்ட 5 கிராம் 200 மில்லி கிராம் நிறை­யு­டைய ஹெரோயின் போதைப் பொரு­ளை மீட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீதி­மன்ற வளா­கத்­துக்குள் வருவோர் சோதனை செய்­யப்­பட்ட பின்பே உள் நுழைய அனு­ம­திக்­கப்­படும் நிலையில்,  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர பகு­தியைச் சேர்ந்த குறித்த பெண் நேற்றுக்காலை நீதி­மன்­றுக்கு வந்­துள்ளார்.

பெண்­ணொ­ருவர் போதைப்பொருள் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தின் விசேட நட­வ­டிக்கைப் பிரி­வுக்கு  இர­க­சிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் அவ­தா­ன­மாக இருந்­துள்­ளனர்.

குறித்த பெண் தனது மார்புக் கச்­சைக் குள் மறைத்து வைத்த போதைப் பொரு­ ளை கைதிக்கு வழங்க முற்­பட்டவேளையில் பொலிஸ் கான்ஸ்­டபிள்  அவரைக் கைது செய்­துள்ளார். கைதான பெண்­ணிடம் வாழைத்­தோட்டப் பொலிஸார் விசார ணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.