ரணில் சந்தர்ப்பம் வழங்கியும், வாய்மூடி நின்ற எம்.பி.க்கள்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூரண மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினருடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், உறுப்பினர்கள் கேள்விகளைத் தொடுக்கலாம் என பிரதமர் சந்தர்ப்பம் வழங்கிய போதும், எந்த ஒரு உறுப்பினரும் இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள புதிய வேட்பாளர் குறித்து கலந்துரையாட தான் இணங்குவதாகவும், அனைவரும் எதிர்பார்க்கும் மறுசீரமைப்பை கட்சியில் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மானம் கப்பல் ஏறப்போவுது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் வாயில் எல்லாம் வருகிறது
ReplyDelete