ஜனாதிபதி - பிரதமர் சந்திப்பு, சு.க. அமைச்சர்களை விலக்க ரணில் பிடிவாதம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று (05) மாலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமருக்க எதிராண நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், இவ்விருவரும், முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட போது, சுமார் ஒரு மணித்தியாலமாக, இவ்விருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்ததாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, தேசிய அரசாங்கத்தை, தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில், பிரதமரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குச் சார்ப்பாக வாக்களித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென்றும், பிரதமர் வலியுறுத்தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
they should be sacked.. they would block the progress aagain...
ReplyDelete